அதிமுக கூட்டணியில் பாஜக - பாமக ஆகியக் கட்சிகள் இணைவது வெறும் யூகங்களாகவே இருந்தது. ஆனால் சில நாட்களுக்கு முன் அதிமுகவுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது பாமக. அந்தக் கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் 7 தொகுதிகளை ஒதுக்கியுள்ளதாகவும் மாநிலங்களவைத் தேர்தலில் 1 தொகுதியும் ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்தது. அதையடுத்து சில மணி நேரங்களில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரான பியூஸ் கோயல் தலைமையில் பாஜக வுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையை முடித்து 5 தொகுதிகளைக் கொடுத்து டீலை முடித்தது. தற்போது தேமுதிகவுடம் பேச்சு வார்த்தைகள் நடத்தி வந்தலும் அது இழுபறியில் நீடிக்கிறது.
பணத்துக்காக இணைந்துள்ள கூட்டணிதான் அதிமுக - பாமக இடையேயான கூட்டணி ஆகும்.மக்களின் நலனுக்காக இல்லாமல் பணத்துக்காக சேர்ந்துள்ள கூட்டணி அது.ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வத்தை விமர்சித்தவர் ராமதாஸ். அதிமுகவின் கதை என்ற பெயரில் அரசை விமர்சித்து அண்மையில்தான் புத்தகம் வெளியிட்டவர் அதே கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார். 7 மக்களவைத் தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் மட்டுமின்றி வேறு எதோகூட இதன் பின்னணியில் உள்ளது. தமிழக மக்களைப் பற்றி கவலைப்படாமல் பணத்துக்காக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக அதிமுகவுடான பாமகவின் கூட்டணி பற்றி ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் தெரிவித்தார்.