பாகிஸ்தானில் பயங்கர கார் குண்டுவெடிப்பு.. 8 பேர் உடல் சிதறி கொடூர மரணம்..!

Mahendran

செவ்வாய், 30 செப்டம்பர் 2025 (14:52 IST)
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இன்று சக்திவாய்ந்த கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததில் குறைந்தது 8 பேர் உயிரிழந்ததாகவும், 19 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
பாகிஸ்தானின்  நாளிதழின் செய்தியின்படி, பலுசிஸ்தான் சுகாதார துறை அமைச்சர் பக்தி முகமது கக்கர், உயிரிழப்பு எண்ணிக்கையை உறுதிப்படுத்தியதோடு, மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.
 
மோடல் டவுன் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் வெடிச்சத்தம் கேட்டது. குண்டுவெடிப்பின் தாக்கத்தால் பல வீடுகள் மற்றும் வணிகக் கட்டிடங்களின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்தன. குண்டுவெடிப்பிற்கு பிறகு துப்பாக்கிச் சூடு சத்தமும் கேட்டதால், அப்பகுதியில் பெரும் பீதி நிலவியது.
 
வெடிவிபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க, மீட்பு குழுவினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதியை சுற்றிவளைத்தனர்.
 
காயமடைந்தவர்களும், உயிரிழந்தவர்களும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டது. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் அவசர சேவைக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், பல ஆண்டுகளாக பிரிவினைவாத அமைப்புகளின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில், தடை செய்யப்பட்ட பலுச் லிபரேஷன் ஆர்மி போன்ற குழுக்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்