ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், இந்திய அணிக்கு டி20 போட்டிகளில் உண்மையான போட்டி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அல்லது தென்னாப்பிரிக்கா போன்ற அணிகள்தான், பாகிஸ்தான் அல்ல என்று தெரிவித்துள்ளார்.
இந்திய இளம் அணியை பற்றி பேசிய ஹர்பஜன், "இந்திய இளம் அணியிடம் திறமை உள்ளது. அவர்கள் மிகவும் திறமையான வீரர்கள். அவர்கள் எவ்வளவு அதிகமாக விளையாடுகிறார்களோ, அவ்வளவு அதிகமாக கற்றுக்கொள்வார்கள். திலக் வர்மா போன்ற வீரர்களிடம் முதிர்ச்சி தெரிகிறது. ஒரு இளம் வீரரிடம் இருந்து இதுபோன்ற ஒரு ஆட்டத்தை யாரும் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் அவர் ரன்கள் எடுக்கும் முறை, ஆட்டத்தை எடுத்து செல்லும் விதம் என அனைத்திலும் ஒரு திட்டத்தைக் காண முடிகிறது" என்று பாராட்டினார்.
இந்திய அணி சர்வதேச கிரிக்கெட்டில் நிச்சயமாக தலைசிறந்த இடத்தில் உள்ளது. அவர்களுக்கு போட்டியாக வேறு எந்த அணிகள் இருக்கின்றன என்றால், அது நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அல்லது தென்னாப்பிரிக்கா மட்டும்தான். பாகிஸ்தான் நிச்சயமாக இல்லை. இரு அணிகளுக்கும் இடையிலான வித்தியாசம் மிக அதிகம்" என்று ஹர்பஜன் சிங் தனது கருத்தை உறுதியாகத் தெரிவித்தார்.