ஓபக்கில் இருந்து கத்தார் வெளியேற்றம் – எண்ணெய் விலையில் மாற்றம்?

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2018 (08:23 IST)
பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி செய்யும் நாடுகள் கூட்டமைப்பானஒபக்அமைப்பில் இருந்து விலகப்போவதாக கத்தார் திடீரென அறிவித்துள்ளது.

கத்தாருக்கும் மற்ற அரபு நாடுகளுக்கும் இடையிலானப் பிரச்சனை இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. தீவிரவாதிகளுக்கு கத்தார் ஆதரவு அளிப்பதாக குற்றம் சாட்டி அந்த நாட்டுடன் சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய  நாடுகள் தூதரக உறவைத் துண்டித்து, கத்தாருடனான விமான சேவையை நிறுத்திக் கொண்டன.இதனால் மிகப்பெரிய பொருளாதார பின்னடைவை கத்தார் சந்தித்தது. அமெரிக்காவின் தலையீட்டால் கத்தாரின் பொருளாதாரப் பின்னடைவு சரிசெய்யப்பட்டு ஓரளவு நிலைமை சரியாகத் தொடங்கி இருந்தது.

இப்போது திடீரென  எண்ணெய் உற்பத்தி செய்யும் அரபு நாடுகளை மையமாகக் கொண்டு இயங்கும் பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி நாடுகள் கூட்டமைப்பான ‘ஒபக்’ எனும் அமைப்பில் இருந்து தாங்கள்  வெளியேறப்போவதாக கத்தார் நேற்று திடீரென அறிவித்துள்ளது.

இதுகுறித்து கத்தாரின் பெட்ரோலியத்துறை அமைச்சர் கூறியுள்ளதாவது ‘ஒபக் கில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளோம். ஜனவரி 1-ம் தேதி முதல் இந்த முடிவை அமலுக்குக் கொண்டுவருகிறோம். ‘ஒபக்’. கூட்டத்தில் எங்கள் முடிவை தெரிவித்து விடுவோம்’ என அறிவித்திக்கிறார்.

இதனால் மற்ற நாடுகளுக்கும் கத்தாருக்கும் இடையில் மீண்டும் மோதல் எழும் பரபரப்பான சூழல் உருவாகி உள்ளது. மேலும் கத்தாரின் இந்த அதிரடி முடிவு கத்தார் பொருளாதாரத்திலும் கச்சா எண்ணெய் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்