ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு ஜெர்மனியிலும் ஆப்பு!

வியாழன், 7 பிப்ரவரி 2019 (19:03 IST)
தனிநபர்களின் சம்மதத்தை பெற்றால் மட்டுமே பயனர்களை பற்றிய அதிக தரவுகளை அதனுடைய செயலி மற்றும் இணையதளத்திற்கு வெளியிலுள்ள தளங்களில் இருந்து திரட்ட வேண்டும் என்று ஃபேஸ்புக்கிற்கு ஜெர்மனியின் நிறுவன போட்டியாற்றல் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
 
தரவுகளை சேகரித்து இந்த நிறுவனம் மேற்கொள்ளும் செயல்பாடுகள் பற்றி ஃபேஸ்புக் பயனர்கள் அறியாமல் இருக்கிறார்கள் என்கிற கவலையை தொடர்ந்து சமூக வலையமைப்பில் இந்த கண்காணிப்பு நிறுவனம் புலனாய்வு மேற்கொண்டது.
 
மூன்றாவது தரப்பு ஆதாரங்கள் அதாவது இன்ஸ்டாகிராம் உள்பட ஃபேஸ்புக்கின் பிற செயலிகள் மூலம் இது தரவுகளை திரட்டி வருகிறது. இது தொடர்பாக மேல்முறையீடு செய்ய போவதாக அமெரிக்க நிறுவனமான ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
 
இந்த ஆணைப்படி, ஃபேஸ்புக் வழங்கி வரும் பல்வேறு சேவைகள் தரவுகள் திரட்டுவதை தொடரலாம். ஆனால், இந்த உறுப்பினர் தன்னார்வத்துடன் சம்மதம் தெரிவித்தால் மட்டுமே இந்த பயனரின் பிரதான ஃபேஸ்புக் கணக்கோடு இந்த தரவுகளை சேர்த்துக்கொள்ள முடியும்.
மூன்றாம் தரப்பு இணையதளங்கள் மூலம் தரவுகளை திரட்டி, அவற்றை ஃபேஸ்புக் பயனரின் கணக்கில் சேர்த்துக் கொள்வதும் இந்த உறுப்பினரிடம் இருந்து உறுதியான அனுமதி பெற்ற பின்னர்தான் அனுமதிக்கப்படும்.
 
தீவிர தரவு திரட்டல் வழிமுறைக்கு இந்த நிறுவனத்தின் நிபந்தனைகளை ஒப்புக்கொள்கிறீர்களா என்று கட்டத்திற்குள் டிக் செய்ய கோருவது மட்டுமே போதுமானதல்ல என்று இந்த கண்காணிப்பு நிறுவனம் கூறியுள்ளது.
 
இந்த ஆணை ஜெர்மனியிலுள்ள ஃபேஸ்புக்கின் செயல்பாடுகளுக்கு மட்டுமே பொருந்தினாலும், பிற ஒழுங்காற்றுநர்களிடமும் இதனால் தாக்கம் பெறலாம் என தோன்றுகிறது. இந்த ஆணை சட்டமாகும் முன்னதாக, இதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய ஒரு மாதம் உள்ளது.
 
இந்த ஆணை உறுதிப்படுத்தப்பட்டால், அடுத்த நான்கு மாதங்களில், இதனை உறுதி செய்யும் வகையில், தொழில்நுட்ப தீர்வுகளை மேம்படுத்த வேண்டியிருக்கும்.
தரவு பகிர்வு:
தரவுகளை திரட்டி ஃபேஸ்புக் அதன் ஆதாயத்திற்கு சந்தையை பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்துகின்ற நம்பிக்கையில் வெளியுறவு அமைச்சகத்தின் இந்த வழக்கு உள்ளது.
 
இந்த ஆணை ஃபேஸ்புக்கின் லைக் மற்றும் ஷேர் பட்டன்களின் பயன்பாட்டை பாதிக்கும். இதன் வழியாகத்தான் பார்வையாளர்களை இனம்காணக்கூடிய இன்டர்நெட் புரோட்டோகால் முகவரி, இணையதள பிரௌசர் பெயர் மற்றும் அதன் பதிப்பு, பிற தகவல்களை ஃபேஸ்புக் பெறுகிறது.
 
பயனர்கள் எந்த பட்டனையும் கிளிக் செய்யாவிட்டாலும், தகவல்கள் திரட்டப்படுவது உண்மையாகும். ஃபேஸ்புக்கில் உள்நுழைவதிலும் இவ்வாறு எந்த தளத்தில் அணுகுகிறார்கள் என இனம்காணும் தகவல் திரட்டப்படுகிறது.
 
அமேசான் நிறுவனம் குறித்தும் ஜெர்மனியின் இந்த கண்காணிப்பு நிறுவனம் ஆய்வு மேற்கொண்டுள்ளது. இந்த தளத்தை பயன்படுத்துகின்ற மூன்றாம் தரப்பு வியாபாரிகள் தொடர்பாக சட்டபூர்வமற்ற முறையில் செயல்பட்டுள்ளதா என்று புலனாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்