அமெரிக்க அதிபருக்கான தேர்தல் அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள நிலையில் அதிபர் ட்ரம்ப்பின் செயல்பாடுகள் அவரது சொந்த கட்சியனராலேயே வெறுக்கும்படியாக உள்ளன. மெக்ஸிகோ தடுப்பு சுவர் விவகாரம், அகதிகள் விவகாரம், விசா நடைமுறைகள் மாற்றம் உள்ளிட்ட பலவற்றில் அதிபர் ட்ரம்ப் தன்னிச்சையான முடிவுகளை எடுத்து வருவது பலரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து நடத்தப்பட்ட சர்வேயில் பலர் ஜோ பிடந்தான் வெற்றிபெறுவார் என கூறியுள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் அதிபர் ட்ரம்ப் தன்னை வெள்ளை மாளிகையிலிருந்து யாராலும் வெளியேற்ற முடியாது என கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சபாநாயகர் நான்சி பெலோசி “புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படும்போது ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிதான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் அவர் வலுகட்டாயமாக வெளியேற்றப்படுவார். அவர் வெளியேறாததால் அமெரிக்க புதிய அதிபருக்கான தொடக்க விழா நடக்காமல் போகாது” என்று கூறியுள்ளார்.