அமெரிக்கர்கள் மீது கை வைத்தால் இதுதான் நடக்கும்! – ட்ரம்ப் எச்சரிக்கை!

Webdunia
சனி, 4 ஜனவரி 2020 (15:44 IST)
உலகில் எங்கெல்லாம் அமெரிக்கர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டாலும் அங்கு தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளது பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக் விமான நிலையம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவின் பேரில் தாக்கப்பட்டதும், அதில் ஈரான் ராணுவ தளபதி சுலேமானி கொல்லப்பட்டதும் உலக நாடுகள் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளன. ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தை கிளர்ச்சியாளர்கள் தாக்கியதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் முடிவடைந்த அடுத்த நாளான இன்று மீண்டும் ஈராக்கில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பேசியுள்ள அதிபர் ட்ரம்ப் ”அமெரிக்கர்களுக்கு எங்கெல்லாம் அச்சுறுத்தல் இருக்கிறது என்ற தகவல்களை சேகரித்துள்ளோம். அவர்களுக்கு ஏதாவது கேடு நேர்ந்தால் ராணுவ நடவடிக்கைகள் எடுக்கவும் தயங்க மாட்டோம்” என கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபரின் இந்த பேச்சும், ஈராக்கின் மீதான தாக்குதலும் அமெரிக்காவை எதிர்க்கும் நாடுகளுக்கு அவர் விடுக்கும் மறைமுக எச்சரிக்கை போல உள்ளதாக உலக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் இந்த செய்கை மூன்றாம் உலக யுத்தத்திற்கு காரணமாகி விடுமோ என பல நாடுகள் அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்