அடுத்த மாதம் அதிபர் பதவி.. இந்த மாதம் ரூ.42 கோடி அபராதம்! - ட்ரம்ப்க்கு வந்த சோதனை!

Prasanth Karthick

செவ்வாய், 31 டிசம்பர் 2024 (11:53 IST)

அடுத்த மாதம் அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் மீதான பாலியல் வழக்கில் நீதிமன்றம் அவருக்கு ரூ.42 கோடி அபராதம் விதித்துள்ளது.

 

 

அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்ற நிலையில் அடுத்த மாதம் அதிபராக பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் அவர் மீதான நீதிமன்ற வழக்குகள் தீவிரமடைந்துள்ளன. அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவருக்கு எதிரான 2 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது.

 

ஆனால் கடந்த 1996ம் ஆண்டில் ட்ரம்ப் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பெண் எழுத்தாளர் ஜீன் கரோல் அளித்த வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணையில் ட்ரம்ப் தொடர்ந்து ஆஜராகமலே இருந்து வரும் நிலையில் அவருக்கு மன்ஹாட்டன் நீதிமன்றம் ரூ.42 கோடியை அபராதமாக விதித்துள்ளது.

 

இதை எதிர்த்து ட்ரம்ப் நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். ஆனால் பெடரல் நீதிமன்றம், மன்ஹாட்டன் நீதிமன்றம் விதித்த அபராதத்தை ட்ரம்ப் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அடுத்த மாதம் அதிபராக போகும் ட்ரம்ப் அதற்குள் தன் மீதான வழக்குகளை முடிக்க முயன்று வரும் நிலையில் இது அவருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்