கரிபியன் கடலில் 8.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை..

Siva

ஞாயிறு, 9 பிப்ரவரி 2025 (08:12 IST)
கரீபியன் கடலில் 8.0 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கரீபியன் தீவு பகுதியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், கேமன் தீவுகளுக்கு தென்மேற்கு 209 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் 8.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிகிறது.
 
இதன் காரணமாக, கேமன் தீவுகள், ஜமைக்கா, கொலம்பியா ஆகிய தீவு பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச சுனாமி தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
சுனாமி ஏற்பட்டபோது அங்கிருந்த கட்டடங்கள் குலுங்கியதாகவும், கட்டிடத்தின் உள்ளே இருந்த பொருள்கள் சிதறியதாகவும் கூறப்படுகிறது. இதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பதிவாகி வருகின்றன.
 
மேலும்  பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், சில மணி நேரம் கட்டிடத்திற்குள் செல்லாமல் இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
 
கட்டிடங்கள் குலுங்கியதால், அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அலறியபடி கட்டிடங்களை விட்டு வெளியேறி அச்சத்துடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்