கார் ஓட்டும் பெண்களுக்கு பூ கொடுத்து பாராட்டும் போலீஸார்

செவ்வாய், 26 ஜூன் 2018 (09:52 IST)
சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கான தடை நீக்கப்பட்டதையடுத்து, கார் ஓட்டும் பெண்களை வரவேற்கும் விதமாக போலீசார் அவர்களுக்கு ரோஜா பூ வழங்கினர். 
சவுதி அரேபிய மன்னர் சல்மானும் அவரது மகன் முகமது பின் சல்மானும் பல்வேறு பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களது மாற்றங்கள் சில பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாக உள்ளது.
 
இதன்படி இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பெண்கள் முறைப்படி உரிமம் பெற்று கார் ஓட்டலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இதனையடுத்து சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் கடந்த ஞாயிற்றிக் கிழமை முதல் பெண்கள் கார் ஓட்ட ஆரம்பித்துள்ளனர். இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
இந்நிலையில் சவுதியில் கார் ஓட்டும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் சவுதி போலீஸார் கார் ஓட்டும் பெண்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மேலும் வண்டியை பாதுகாப்புடன் ஓட்டும்படி அறிவுறுத்தினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்