குஜராத் மாநிலத்தை சேர்ந்த 90 வயது மூதாட்டி தாஹிபென் நரோட்டம் தாஸ் மோடி. இவர் தன்னை பிரதமரின் அத்தை என்று கூறி வருகிறார். இந்த நிலையில் இவருக்கு சொந்தமான கட்டிடம் ஒன்றை மத்திய தொழிலாளர் அமைச்சகம் கடந்த 1983ஆம் ஆண்டு குத்தகைக்கு எடுத்து மாத வாடகையாக ரூ.1500 வழங்கி வருகிறது. ஆனால் இந்த குத்தகை ஒப்பந்தம் 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் புதுப்பிக்கப்படாமல் பழைய வாடகையையே அமைச்சகம் கொடுத்து வருவதாக புகார் கூறிய தாஹிபென், புதிய ஒப்பந்தம் போட்டு வாடகையை அதிகரிக்க வேண்டும் என்று புகார் மனு கொடுத்தார்.
தன்னை பிரதமரின் அத்தை என்று கூறிக்கொண்ட போதிலும் இவர் கொடுத்த மனுமீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து தாஹிபென் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரணை செய்த தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சர்யலு, அலட்சியமாக இருந்த 2 அதிகாரிகளுக்கும் ஏன் அபராதம் விதிக்கக்கூடாது? என்று கேட்டு, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது