இலங்கையில் பெட்ரோல் விலை உட்சம் !

செவ்வாய், 24 மே 2022 (18:23 IST)
நமது அண்டை  நாடான இலங்கையில் கொரொனா காலத்தில் ஏற்பட்ட சுற்றுலாபயணிகள் குறைவு, அன்னியச் செலாவணிப் பற்றாக்குறையால் டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பு கரும் சரிவைச் சந்தித்துள்ளது.

இதனால்,பெரிய அளவில்  பொருளாதார சந்திப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அத்தியாவசிய பொருட்களும், எரிபொருள் விலையும் அதிகரித்துள்ளது.சமீபத்தில் இந்தப் பொருளாதார    நெருக்கடியால் பிரதமர் ராஜபக்ஷே ராஜினாமா செய்தார்.அதற்குப் பின், ரணில் விக்ரமிங் பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.

இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது, பெட்ரோல் விலை 24.3 சதவீதம் உயர்ந்துள்ளது,. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.420 க்கு விற்பனையாகிறது. அதேபோல் டீசல் 38.4 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் டீசல் ரூ.400  ஆக உள்ளது. இரண்டாவது முறையாக டீசல் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்