ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் ஏற்றத்தில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

Siva

திங்கள், 29 செப்டம்பர் 2025 (09:30 IST)
கடந்த வாரம் அமெரிக்காவின் H1-B விசா கட்டண உயர்வு போன்ற சில காரணங்களால் இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து சரிந்து வந்தது, இதன் விளைவாக முதலீட்டாளர்கள் பெரும் இழப்புகளை சந்தித்தனர். இந்த சரிவு முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியிருந்தது. 
 
இருப்பினும், இன்று மீண்டும் பங்குச்சந்தை ஏற்றம் கண்டு வருவது அவர்களுக்கு நிம்மதியை தந்துள்ளது. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 137 புள்ளிகள் உயர்ந்து 80,565 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இதேபோல், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 44 புள்ளிகள் உயர்ந்து 24,708 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. 
 
இன்றைய வர்த்தகத்தில் அப்போலோ ஹாஸ்பிடல்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், சிப்லா, டாக்டர் ரெட்டி, எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, ஜியோ ஃபைனான்ஸ், ஸ்டேட் வங்கி, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், சன் ஃபார்மா, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன. 
 
அதே நேரத்தில், ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், ஹீரோ மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐடிசி, மாருதி உள்ளிட்ட சில பங்குகள் சரிவில் வர்த்தகமாகி வருகின்றன. இந்த ஏற்றம், சந்தையில் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்