ZOMATO மூலம் டெலிவரி செய்த கெட்டுப்போன இறைச்சி!

செவ்வாய், 24 மே 2022 (15:32 IST)
தஞ்சையில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு ZOMOTO நிறுவனம் கெட்டுப்போன இறைச்சிகள் கொண்டுவரப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் ஒரத்த நாட்டில் நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சியில் சமைப்பதற்காகப் பிரபலல பிரியாணி கடை நிறுவனம் ஒன்று ஆர்டர் எடுத்துள்ளது.

இதற்காக அந்த நிறுவனம்  ZOMOTO மூலம்  கர்நாடகாவில் இருந்து, ஆடு மற்றும் கோழி இறைச்சிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்பின்னர், அந்த இறைச்சிகளைத் திறந்து பார்த்த போது, அவை கெட்டுப் போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து பிரியாணி கடை உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில்  பிரபல நிறுவனத்திற்குச் சொந்தமான குடோனில்  உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் இருப்பது கெட்டுப்போன இறைச்சி என்பது  தெரியவந்தது. சுமார்., அங்கிருந்து 3,600 கிலோ கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்