துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த மகத்தான வெற்றியை, பிரதமர் நரேந்திர மோடி 'ஆபரேஷன் சிந்துர்' என்று குறிப்பிட்டு, தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
'ஆபரேஷன் சிந்துர்' கடந்த மே மாதம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத மையங்கள் மீது இந்தியா நடத்திய வான்வழி தாக்குதலைக் குறிக்கிறது. அந்தத் தாக்குதல், பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்புகளை குறுகிய காலத்தில் செயலிழக்க செய்தது. இந்த இராணுவ நடவடிக்கையை, ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் வெற்றிக்கு ஒப்பிட்டு பிரதமர் மோடி பதிவிட்டது, விளையாட்டு அல்லது இராணுவம் என எதுவாக இருந்தாலும், இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தும் என்பதை உணர்த்துகிறது.
பிரதமர் மோடியின் இந்த பதிவுக்கு போராக இருந்தாலும் சரி, கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, பாகிஸ்தானை வீழ்த்துவது இந்தியாவின் வழக்கம் என உணர்ச்சி பொங்க பதிவு செய்து வருகின்றனர்.