பாகிஸ்தானில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ராணுவத்திற்கும் பயங்கரவாத அமைப்பிற்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். இதனை அடுத்து அவரது இறுதி சடங்கில் பங்கேற்று பிரார்த்தனை நடந்த அங்குள்ள இஸ்லாமிய குருக்கள் மறுப்பு தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.
சொந்த நாட்டுக்கு எதிராக செயல்பட்டு அப்பாவி மக்களை கொலை செய்யும் பயங்கரவாதிகளுக்கு இறுதி சடங்கு மற்றும் பிரார்த்தனை நடத்த முடியாது என்று அவர்கள் கூறிவிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து உள்ளூர் மக்களே அந்த நபரின் உடலை அடக்கம் செய்ததாகவும், நெருங்கிய உறவினர்கள் 20 பேர் மட்டுமே அந்த இறுதி சடங்கில் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.