இந்தியா கொடுத்த ஆதாரத்தால் அமெரிக்காவிடம் வசமாக சிக்கிக்கொண்ட பாகிஸ்தான்!

Webdunia
சனி, 2 மார்ச் 2019 (21:13 IST)
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய வான்படை அதிரடியாக தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் எப்16 என்ற போர் விமானத்தை பயன்படுத்தி இந்தியாவை தாக்க முயற்சித்தது. ஆனால் இந்திய படை பாகிஸ்தான் விமானங்களை விரட்டியடித்தது. இங்குதான் பாகிஸ்தானுக்கு பிரச்சனை ஆரம்பித்துள்ளது.
 
அமெரிக்காவிடம் இருந்து எப்16 விமானத்தை பாகிஸ்தான் வாங்கும்போது இந்த விமானங்களை உள்நாட்டு தீவிரவாதிகளை அழிப்பதற்கு மட்டுமே வாங்குவதாகவும், அண்டை நாட்டின் மீது பயன்படுத்த ஆட்டோம் என்றும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஆனால் தற்போது இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த எப் 16 ரக விமானங்களை பயன்படுத்தியுள்ளதை அமெரிக்காவிடம் இந்திய அதிகாரிகள் ஆதாரங்களுடன் ஒப்படைத்துள்ளனர்.
 
இதுகுறித்து அமெரிக்கா, பாகிஸ்தானிடம் விளக்கம் கேட்டுள்ளது. பாகிஸ்தான் சரியான விளக்கம் அளிக்காவிட்டால் எப்16 விமானங்களை திரும்ப பெறும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்