எங்ககிட்டயும் அணு ஆயுதம் இருக்கு! – பாகிஸ்தான் அணு ஏவுகணை சோதனை

வெள்ளி, 24 ஜனவரி 2020 (09:15 IST)
பாகிஸ்தான் அரசு தரையிலிருந்து புறப்பட்டு சென்று தாக்கும் காஸ்னவி ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

உலக நாடுகள் தங்கள் ஆயுத பலத்தை சோதிப்பதற்காகவும், தங்கள் ஆயுத பலத்தை மற்ற நாடுகளுக்கு நிரூபிக்கவும் அடிக்கடி ஏவுகணை சோதனை போன்றவற்றில் ஈடுபடுகின்றன. சமீப காலமாக வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளில் ஈடுபடுவதை அமெரிக்கா கண்டித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் தன்னிடம் உள்ள காஸ்னவி என்ற ஏவுகணையை சோதனை செய்துள்ளது. தரையிலிருந்து புறப்பட்டு தரையில் உள்ள இலக்குகளை தாக்கும் வல்லமை பெற்ற இந்த ஏவுகணை அணு குண்டுகளை தாங்கி சென்று தாக்கும் திறன் பெற்றவை. இந்த காஸ்னவி ஏவுகணை சோதனையை ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்திய பாகிஸ்தான் மீண்டும் நேற்று சோதனை செய்துள்ளது. அந்த சோதனை வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

சமீப காலமாக இந்தியா தனது அதிநவீன ஏவுகணைகளை சோதித்து பார்த்து வரும் நிலையில் பாகிஸ்தான் இந்த சோதனையில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்