பிரதமரை அடுத்து இடைக்கால பிரதமர் மீதும் ஊழல் வழக்கு! என்ன நடக்குது பாகிஸ்தானில்

செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (05:36 IST)
சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளதாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட் அவரை தகுதி நீக்கம் செய்தது. இதனால் நவாஸ் ஷெரீப் பதவி விலகியதை அடுத்து  நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரரும், பஞ்சாப் மாகாண முதல்வருமான, ஷபாஸ் ஷெரீப் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இவர் பாராளுமன்ற தேர்தல் முடிந்த பின்னரே பிரதமராக பதவியேற்க முடியும்



 
 
இந்த நிலையில் இடைக்கால பிரதமராக நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவரும், பெட்ரோலியத் துறை அமைச்சருமான, ஷாகித் காகன் அப்பாஸி பதவியேற்றார். ஆனால் இவர் மீது தற்போது ஒரு ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 
இயற்கை எரிவாயு ஒப்பந்தத்தில், 2,200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, அப்பாஸி மீது, பாகிஸ்தானின் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் ஊழல் வழக்கு ஒன்று உள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. எனவே இவரும் பதவிநீக்கம் செய்யப்படுவாரா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளதால் பாகிஸ்தானில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்