730 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை கேட்ட ரயில்வே அதிகாரி

திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (20:45 IST)
ஒருவாரம், ஒரு மாதம் விடுமுறை கேட்கவே இந்தியாவில் உள்ள அலுவலர்கள் தயங்கி தயங்கி கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில் பாகிஸ்தான் ரயில்வே அதிகாரி ஒருவர் 730 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வேண்டும் என்று விடுமுறை விண்ணப்பம் அனுப்பியுள்ளார்.
 
இம்ரான்கான் தலைமையிலான அமைச்சரவை சமீபத்தில் பாகிஸ்தானில் பதவியேற்றது. பிரதமர் இம்ரான்கானின் அமைச்சரவையில் ரயில்வேதுறை அமைச்சராக ஷேக் ரஷீத் என்பவர் பதவியேற்றார். 
 
இவர் பதவியேற்ற பின்னர் ரயில்வே அதிகாரிகளிடம் கடுமையாக நடந்து கொள்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரயில்வே துறையில் தலைமை வர்த்தக மேலாளராக பணியாற்றும் முகமது அனீப் குல் என்பவர் இந்த அமைச்சரின் கீழ் தன்னால் பணிபுரிய முடியாது என்றும், அதனால் 730 நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வேண்டும் என்றும் தனது மேலதிகாரியிடம் விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ளார். 
 
இந்த விண்ணப்பத்திற்கு இன்னும் மேலதிகாரி பதிலளிக்கவில்லை என்று பாகிஸ்தான் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்