பாலியல் தொழிலுக்காக பாகிஸ்தான் பெண்கள் கடத்தல்! – அதிர்ச்சி ரிப்போர்ட்!

வியாழன், 5 டிசம்பர் 2019 (08:48 IST)
பாகிஸ்தானை சேர்ந்த பெண்களை கடத்தி சீனாவில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக வெளியாகி உள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவை சேர்ந்த பலர் பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள கிறிஸ்தவ பெண்களை கடந்த ஆண்டுகளில் அதிகளவில் திருமணம் செய்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2018-19ல் 629 பெண்கள் இதுபோல சீனர்களை திருமணம் செய்து கொண்டு சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.

ஆனால் திருமணம் செய்யப்பட்ட பெண்கள் சீனர்களின் வயதில் பாதி அளவுகூட எட்டாத இளம் பெண்கள் என்பது தெரிய வந்துள்ளது. பல பாகிஸ்தான் குடும்பங்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு தங்கள் பெண்களை சீனர்களுக்கு மணம் செய்து கொடுப்பதாகவும், ஆனால் அங்கு அந்த பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுவதாகவும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல்களுக்கு எதிர்வினையாற்றியுள்ள சமூக ஆர்வலர்கள் பணம் வாங்கி கொண்டு பெண்ணை கொடுப்பது ஒரு வகையில் அந்த பெண்ணை விற்பது போலதான். எனவே இதை கடத்தல் போன்ற சட்டத்திற்கு புறம்பான விஷயமாகவே கருத வேண்டும். பணத்திற்காக சீனாவுக்கு கடத்தப்பட்ட பெண்களை மீட்க பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்