இந்த நிலையில் குல்பூஷன் யாதவ் தூக்கு தண்டனை விவகாரத்தால், இரு நாட்டு உறவுகளும் பாதிக்கப்படும்' என்று சுஷ்மா ஸ்வராஜ் பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்தார். மேலும் இந்தியரான குல்பூஷனுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால், அது திட்டமிட்ட கொலையாகக் கருதப்படும் என்றும் பாகிஸ்தானுக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இந்தியாவின் எச்சரிக்கைக்குப் பதிலளித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்,' அனைத்து அச்சுறுத்தலுக்கும் பாகிஸ்தான் படை தயாராக உள்ளது என்றும், மேலும், அண்டை நாடுகளுடன் நட்பு பாராட்டவே பாகிஸ்தான் விரும்புகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.