தீராத பப்ஜி மோகம்; போன் கொடுக்க மறுத்த பெற்றோர்! – துப்பாக்கியை எடுத்த சிறுவன்!

வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (08:39 IST)
பாகிஸ்தானில் பப்ஜி விளையாட போம் வாங்கி தராததால் சிறுவன் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய தலைமுறையினரிடம் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்து வருவதுடன், ஆன்லைன் விளையாட்டு மோகமும் அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் பப்ஜி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு அடிமையான சிறுவர்கள் பலர் விபரீதமான பல செயல்களை செய்ததால் பல நாடுகளில் இதுபோன்ற விளையாட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன.

பாகிஸ்தானிலும் பப்ஜி விளையாட்டுக்கு சில ஆண்டுகள் முன்னதாக தற்காலிக தடை விதிக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தால் தடை நீக்கப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த முகமது ஆதிப் என்ற சிறுவன் பப்ஜி விளையாட்டில் தீராத மோகம் கொண்டவனாக இருந்துள்ளான்.

இதற்காக தனக்கு ஸ்மார்ட்போன் வாங்கி தரும்படி பெற்றோரிடம் கேட்டதற்கு அவர்கள் மறுத்துள்ளனர். இதனால் விரக்தியில் மூழ்கிய சிறுவன் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துள்ளான். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்