இன்று காலையில் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற மாணவி, காலையில் வகுப்பில் மயங்கி விழுந்தார். உடனே பள்ளி ஆசிரியர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பூச்சி மருத்து குடித்துள்ளதாகவும் அவரை மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் அருகேயுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறினர்.
இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மாணவிக்கு அதேபகுதியைச் சேர்ந்த ஒரு மாணவருடன் காதல் இருந்ததாகவும், இது மாணவியின் வீட்டிற்கு தெரியவே அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வந்ததாகவும் இதனால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.