உக்ரைன் நாட்டின் மீது ரஷிய ராணுவ போர் தொடுத்து 1 ஆண்டு நிறைவடைந்துள்ளது. ரஷியாவுக்கு எதிராக உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கு உலக நாடுகள் நேட்டோ கூட்டமைப்பும், உக்ரைன் நாட்டிற்கு நிதியுதவியும், ஆயுதத் தளவாடங்களும் அளித்து உதவி வருகின்றன. இதனால், உக்ரைன் நாடு, வல்லரசான ரஷியாவுக்கு எதிராகப் போரிட்டு, பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், கடந்தாண்டு அலெக்சி மொஸ்கலியயோவ் என்ற நபரில் மகள் மரியா, தன் பள்ளியில் ஒரு ஓவிய வரைந்தார். அதில், உக்ரேன் நாட்டுக் கொடியுடன் ஒரு பெண்ணும், அவருடன் குழந்தையை நோக்கி, ரஷிய கொடி மற்றும் ஏவுகணைகள் வரைந்திருந்தார்.
இதுகுறித்து, பள்ளி தலைமையாசிரியர் போலீஸில் புகாரளித்தார். இதையடுத்து, ராணுவத்தை இழிவுபடுத்தியதாக, சிறுமி வரைந்த ஓவியத்திற்கு, அலெக்சி மீது வழக்குப் பதிவு செய்து, சிறுமியை சிறுவர்கள் காப்பக்கத்தில் வைத்தனர்.