ஆஸ்கர் விருது வென்ற இயக்குனரை கடத்திய இஸ்ரேல் ராணுவம்!? - இஸ்ரேலில் அதிர்ச்சி!

Prasanth Karthick

செவ்வாய், 25 மார்ச் 2025 (13:38 IST)

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே மீண்டும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ஆஸ்கர் விருது வென்ற இயக்குனரை இஸ்ரேல் ராணுவம் கடத்தியதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இஸ்ரேல் - பாலஸ்தீன போர் பிரச்சினையை மையப்படுத்தி ‘நோ அதர் லேண்ட்’ என்ற ஆவணப்படத்தை இயக்கியவர் பாலஸ்தீனத்தை சேர்ந்த இயக்குனர் ஹம்தான் பல்லால் மற்றும் யுவல் ஆபிரகாம். இதில் ஹம்தான் பல்லால் பாலஸ்தீன மேற்கு கரையில் வசித்து வந்த நிலையில் அப்பகுதிக்குள் ஊடுறுவிய இஸ்ரேலியர்களால் தாக்கப்பட்டுள்ளார். பின்னர் இஸ்ரேல் ராணுவம் அவரை சிறைப்பிடித்து சென்றுள்ளது.

 

இந்த தகவலை யுவல் ஆபிரகாம் சமூக வலைதள பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான ஹம்தானை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றபோது இஸ்ரேல் ராணிவம் அவரை கைது செய்து கொண்டு சென்றதாகவும், அவர் கைது செய்யப்பட்டபோது காயமடைந்து அதிகளவு ரத்த கசிவில் இருந்ததாகவும் யுவல் ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.

 

நோ அதர் லேண்ட் ஆவணப்படம் இஸ்ரேல் ராணுவத்தால் இடிக்கப்பட்ட மேற்கு கரை மசாஃபர் யட்டா மக்களின் போராட்டத்தை சித்தரிக்கிறது. இதற்கு சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கரும் வழங்கப்பட்ட நிலையில் அந்த ஆவணப்படத்தின் இயக்குனர் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்