ஈரோட்டில் தோல்வி அடைந்தால் அதிமுகவை ஓபிஎஸ் இடம் ஒப்படைக்க வேண்டும்: புகழேந்தி

வியாழன், 9 பிப்ரவரி 2023 (14:02 IST)
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக டெபாசிட் வாங்கவில்லை என்றால் அதிமுக அலுவலகத்தை எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்க வேண்டும் என ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக தென்னரசு போட்டியிடுகிறார் என்பதும் இவருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க இருப்பதால் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கடும் சவால் கொடுப்பார் என்றும் கூறப்படுகிறது.
 
மேலும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு பெற்ற தென்னரசு வேட்பாளருக்கு ஓபிஎஸ் ஆதரவு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஈரோட்டில் அதிமுக டெபாசிட் வாங்கவில்லை என்றால் அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவி உட்பட அனைத்தையும் ஓ பன்னீர் செல்வத்திடம் ஈபிஎஸ் ஒப்படைக்க வேண்டும் என புகழேந்தி தெரிவித்துள்ளார். 
 
ரூ.40000 கோடி ஊழல், தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பாக ஈரோட்டில் பிரச்சாரம் செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்