ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: பாகிஸ்தானின் இரு விரர்கள் சதம்!

வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (08:23 IST)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: பாகிஸ்தானின் இரு விரர்கள் சதம்!
ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லாகூரில் நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 348 ரன்கள் எடுத்தது. பென் மிக்ரோனேட் 104 ரன்கள் எடுத்தார்
 
இதனை அடுத்து 349 என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணியின் இமாம்-உல்-ஹக் மற்றும் பாபர் அசம் ஆகிய இருவரின் சதத்தால் 49 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 349 ரன்கள் எடுத்தது 
 
இதனை அடுத்து இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 2ஆம் தேதி லாகூரில் நடைபெறும்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்