18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 2 மணி நேரம் மட்டுமே இணையத்தை பயன்படுத்தலாம்: புதிய கட்டுப்பாடு

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (12:29 IST)
18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் ஒரு நாளுக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே இணையத்தை பயன்படுத்த அனுமதி என்று சீன அரசு அதிரடியாக தெரிவித்துள்ளது.  
 
சீனாவின் சைபர்செல் அமைச்சகம் இது குறித்து தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஸ்மார்ட் ஃபோன்களில் இணைய சேவைகளை பெற முடியாது என்றும்  அவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே இணையத்தை பயன்படுத்த அனுமதிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது. 
 
அதேபோல் 8 முதல் 15 வயது உட்பட்ட சிறுவர்கள் ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் மட்டுமே இணையத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் எட்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு 40 நிமிடங்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் தெரிவித்துள்ளது.  
 
ஆனால் அதே நேரத்தில் குழந்தைகளின் உடல்நலம் மற்றும் மனநலத்துக்கு உகந்தவையாக கருதப்படும் செயலிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்