ஒரு துண்டு உருளைக்கிழங்கு சிப்ஸ் ரூ.736!!!

சனி, 22 அக்டோபர் 2016 (11:06 IST)
உலகின் மிக விலை மதிப்புமிக்க உருளைக் கிழங்கு சிப்ஸை உருவாக்கியிருக்கிறது ஸ்வீடனைச் சேர்ந்த மதுபான நிறுவனம். 

 
ஸ்வீடனின் முன்னணி மதுபான நிறுவனங்களில் ஒன்று செயிண்ட் எரிக்ஸ். விலை உயர்ந்த மதுபானங்களை மட்டுமே விற்பனை செய்து வரும் இந்நிறுவனம், தங்களது மதுவுக்கு இணையான நொறுக்குத்தீனி இருக்க வேண்டும் என்பதற்காக, உலகின் விலையுயர்ந்த உருளைக்கிழங்கு சிப்ஸை உருவாக்கி உள்ளனர்.
 
அழகான பெட்டியில் 5 உருளைக்கிழங்கு சிப்ஸ் மட்டுமே வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு துண்டின் விலை 736 ரூபாய். 5 துண்டுகள் அடங்கிய ஒரு பெட்டியின் விலை 3,746 ரூபாய். சிப்ஸில் சேர்க்கப் படும் 5 பொருட்களை 5 நாடுகளில் இருந்து கொண்டு வரப்படுகிறது.
 
’பாதாம் உருளை என்ற அரிய வகை உருளைக்கிழங்கைப் பயன்படுத்துகிறோம். உலகின் முன்னணி சமையல் கலைஞர் தன் கரங்களால் இந்த சிப்ஸை உருவாக்கி இருக்கிறார். அதனால் தான் இவ்வளவு விலை வைக்க வேண்டியதாகிவிட்டது. விலை அதிகமாக இருப்பதால் மக்கள் விரும்புவார்களா என்று சந்தேகமாக இருந்தது. ஆனால் உயர்தரமான மதுவை அருந்துபவர்கள், உயர்தரமான நொறுக்குத்தீனியையும் ஆதரிக்கிறார்கள். தொடர்ந்து உருளைக் கிழங்கு சிப்ஸை உருவாக்க முடிவு செய்திருக்கிறோம்’ என்கிறார் அந்நிறுவனத்தின் மேனேஜர் மார்கஸ் ஃப்ரையாரி.

வெப்துனியாவைப் படிக்கவும்