அமெரிக்காவில் கொரோனா அதிகரிக்க ட்ரம்ப்தான் காரணம்? – முன்னாள் அதிபர் ஒபாமா சாடல்!

Webdunia
திங்கள், 11 மே 2020 (15:26 IST)
அமெரிக்காவில் அதிகரித்துள்ள கொரோனா பாதிப்புகளுக்கு அதிபர் ட்ரம்பின் முறையற்ற நிர்வாகமே காரணம் என முன்னாள் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. முக்கியமாக உலகளவில் அமெரிக்கா கொரோனாவால் அதிகமான பாதிப்புகளை சந்துத்துள்ளது. சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தாக்கி அமெரிக்காவில் உயிரிழந்துள்ளனர். பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்காவில் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ நடவடிக்கைகளை காட்டிலும் சீனா மீது பழி சுமத்துவதிலேயே குறியாக இருப்பதாக பலர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா குறித்து பேசியுள்ள முன்னாள் அமெரிக்க அதிபரும், டெமக்ரடிக் கட்சி உறுப்பினருமான பாரக் ஒபாமா “அமெரிக்காவில் கொரோனா தடுப்பு விவகாரங்களில் ட்ரம்ப் அரசாங்கம் குழப்பமான பேரழிவை ஏற்படுத்தி விட்டது. உலகளாவிய நெருக்கடியின் போது சரியான தலைமை இருக்க வேண்டியதன் அவசியத்தை ட்ரம்பின் நடவடிக்கைகள் உணர்த்தியுள்ளன” என கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்