11.5 அடி தூரம் நகர்ந்த மலை: அதிர்ச்சி அளிக்கும் விளைவுகள்...

திங்கள், 14 மே 2018 (19:19 IST)
வடகொரியா நாட்டின் மேன்டேப் மலை பகுதியில் ஆணு ஆயுத சோதனை கூடம் உள்ளது. இங்கு இருந்துதான் பல அணு ஆயுதங்களை வடகொரியா சோதித்து வந்துள்ளது. 
 
தற்போது அணு ஆயுத சோதனைகளை கைவிடுவதாக வடகொரியா அதிபர் அறிவித்திருந்தாலும், இதுவரை நடந்த் அணு ஆயுத சோதனை தாக்குதலால் ஏற்பட்டுள்ள விளைவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஆம், வடகொரியா மேற்கொண்ட அணு ஆயுத சோதனையின் விளைவால், அங்குள்ள மலை ஒன்று 11.5 அடி தூரம் நகர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த மலையானது சுமார் 1.6 அடி பூமிக்குள் புதைந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. 
 
மேலும், நடத்தப்பட்ட தொடர் அணு ஆயுத சோதனைகளால் மேன்டேப் மலைப் பகுதியின் சோதனை கூடம், செயல்படுத்த முடியாத நிலையில் சேதமடைந்துள்ளதாம். 
 
இதை மறைக்கதான் வடகொரிய அதிபர் அணு ஆயுதத்தை கைவிடுகிறேன் என நாடகம் ஆடுவதாகவும் கூறுகின்றனர். விரைவில் சோதனைக்காக வேறு இடத்தை தேர்ந்தெடுத்து பழைய படி சோதனைகளை ஆரம்பிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்