நேபாள போராட்டம்: சிக்கி தவிக்கும் இந்தியர்களை மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

Mahendran

புதன், 10 செப்டம்பர் 2025 (14:18 IST)
நேபாளத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் கடுமையான போராட்டங்களா சுமார் 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கி தவிக்கின்றனர். இவர்களை மீட்டுவர, இந்தியா சிறப்பு விமானங்களை அனுப்ப தயாராகி வருகிறது.
 
காத்மண்டுவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள், இந்தியர்களை மீட்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதற்காக நேபாள ராணுவத்துடன் இணைந்து, விமானங்கள் தரையிறங்கவும், இந்தியர்களுக்கு பாதுகாப்பான வழியை உறுதி செய்யவும் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றனர்.
 
 தற்போதைய நிலையில், இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் புதுடெல்லியில் இருந்து அனுப்பப்பட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
 
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், நேபாளத்திற்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு இந்தியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதுடன், சிக்கி தவிப்பவர்களுக்காக உதவி எண்களையும் வெளியிட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்