வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!

வெள்ளி, 28 அக்டோபர் 2022 (22:09 IST)
வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கிழக்கு கடல் பகுதியை நோக்கி  மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
 


வடகொரியாவில் கிம் ஜாங் உன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, இந்த நாடு அவ்வப்போது ஏவுகணை சோதனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில், உலக வல்லரசு நாடுகளின் கடும் எச்சரிப்பை மீறி கிழக்கு கடல் பகுதியில், கண்டம்விட்டு கண்டம் பாயும்   ஏவுகணை சோதனையை  வடகொரியா நடத்தியுள்ளது.

ALSO READ: "வட கொரியா எந்த நேரத்திலும் அணு ஆயுத சோதனை நடத்தலாம்"
 
தென் கொரியா- அமெரிக்கா கடற்படைகள் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் அமெரிக்க படையுடன் இணைந்து தென் கொரியாவும் பதிலடி கொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்