வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை..தென்கொரியா எல்லையில் பதற்றம்

வெள்ளி, 14 அக்டோபர் 2022 (21:41 IST)
வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

வடகொரியாவில் கிம் ஜாங் உன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, இந்த நாடு அவ்வப்போது ஏவுகணை சோதனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

சமீபத்தில், தென் கொரியா- அமெரிக்கா கடற்படைகள் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டதற்குப் பதிலடி தரும் வகையில், வடகொரியா சமீபத்தில் ஏவுகணை சோதனை நடத்தியது.

கடந்த வாரத்தில் 8 முறை ஏவுகணை சோதனை நடத்திய நிலையில் இன்று மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

இதகுறித்து, தென் கொரியா கூறியுள்ளதாவது: வடகொரியா கிழக்கு கடற்கரை குறுகிய தூர ஏவுகணை சொதனை நடத்தியதாகவும், வடகொரியா போர் விமானங்கள் தங்கள் நாடு எல்லையில் பறந்து சென்றதகாவும் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் இரு நாடுகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்