ரியோ ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா நாடு 7 பதக்கங்கள் மட்டுமே வென்றுள்ளதால், அந்நாட்டின் தலைவர் போட்டியில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு தண்டனை வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன.
ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு சென்ற வடகொரியா நாட்டினரிடம் அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன், கண்டிப்பாக குறைந்தபட்சம் 17 பதக்கங்களையாவது வென்று வர வேண்டும் என்று கூறினாராம்.
ஆனால் வடகொரியா 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களுடன் திரும்பியது. வடகொரியாவின் எதிரி நாடான தென்கொரியா 9 தங்கம் உள்பட 21 பதக்கங்களை குவித்தது.
இதில் ஆத்திரம் அடைந்த அந்நாட்டின் தலைவர் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களை தண்டிக்கும் விதமாக அவர்களை நிலக்கரி சுரங்கங்களில் கூலித்தொழிலாளியாக வேலைக்கு அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோன்று ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு வீடு, கார் போன்ற பரிசுகள் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.