தென் கொரியா மீது வட கொரியா திடீர் தாக்குதல்: புதிய போர் தொடங்குகிறதா?

Mahendran
வெள்ளி, 5 ஜனவரி 2024 (13:57 IST)
இஸ்ரேலில் ஓர் இன்னொரு பக்கம் போர், உக்ரைனில் இன்னொரு பக்கம் போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது தென்கொரியா மீது வடகொரியா திடீர் என தாக்குதல் நடத்துள்ளதால் இன்னொரு போர் தொடங்குமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

தென்கொரியாவுக்கு சொந்தமான ஒரு தீவில் வடகொரியா திடீரென பீரங்கி தாக்குதல் நடத்தி உள்ளதாகவும்  வடகொரியாவின் இந்த ராணுவ நடவடிக்கையால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த தாக்குதலால் தென்கொரிய ராணுவத்திற்கு எந்த சேதமும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த தாக்குதல் போர் பதற்றத்தை அதிகரித்து அமைதியை குலைக்கும் செயல் என்று  தென்கொரிய அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே அணு ஆயுதம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே மோதல் ஏற்பட்டு வரும் நிலையில் தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருகிறது.. இந்த நிலையில் தென்கொரியா மீது வடகொரியா தாக்குதல் நடத்தி இருப்பதை அடுத்து அமெரிக்கா, தென்கொரியாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்