இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் பொருளாதாரம் போன்ற துறைகளில் முக்கியமான பங்களிப்புகளை செய்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் இந்திய மதிப்பில் ரூ.8.32 கோடி பரிசாக வழங்கப்படும்.
மருத்துவம் மற்றும் இயற்பியல் துறைகளுக்கான நோபல் பரிசுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று வேதியியல் துறைக்கான பரிசு அறிவிக்கப்பட்டது. கணினி மூலம் புரத வடிவமைப்பிற்காக டேவிட் பேக்கர், டெமிஸ் ஹஸாபிஸ், மற்றும் ஜான் எம். ஜம்பர் ஆகிய மூவரும் இந்த பரிசை பகிர்ந்தளிக்கின்றனர்.
டேவிட் பேக்கருக்கு, கணக்கீட்டு புரத வடிவமைப்புக்கான ஆராய்ச்சிக்காக பரிசின் ஒரு பகுதி வழங்கப்பட்டு, மற்றொரு பகுதி புரத கட்டமைப்பு குறித்த ஆராய்ச்சியில் பங்காற்றிய ஹஸாபிஸ் மற்றும் ஜம்பர் ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து மூவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.