ஜவ்வரிசி மூலம் தயார் செய்யப்படும் உணவு வகைகள் ரேஷன் கடை மூலம் வழங்க மத்திய,மாநில அரசிடம் கோரிக்கை - மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி!

J.Durai

வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (19:47 IST)
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மத்திய அரசின்  திருவனந்தபுரம் மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம்  சார்பில் விவசாயிகளிடையே ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருவனந்தபுரம் மத்திய கிழங்கு பயிர்கள்  ஆராய்ச்சி நிறுவன மூத்த விஞ்ஞானி ஜெகநாதன் கலந்து கொண்டு மரவள்ளி கிழங்கு உற்பத்தி செய்வது மற்றும் அதன் மூலம் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை குறித்து விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்......
 
மரவள்ளியில் பல புதிய ரகங்கள் தற்போது அறிமுகப்படுத்தி உள்ளதாகவும், தமிழகத்தில் மட்டும் இன்னும் பழைய ரகங்களை விளைவித்து வருகின்றனர்.
 
இதனை மாற்றும் விதமாக தான் மரவள்ளி கிழங்கு  உணவு திருவிழா வருகின்ற 4 மற்றும் 5ஆம் தேதி ராசிபுரம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
தனியார் திருமண மண்டபத்தில் மரவள்ளி பயிரிட்டு விளைச்சல் அதிகரிப்பது அதன் மூலம் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை மற்றும் பல்வேறு ஆலோசனைகளை விவசாயிகளுக்கு வழங்கப்படுவதாகவும், 
ரேஷன் கடையில் ஜவ்வரிசி பொருட்களை விற்பனை செய்ய மத்திய மாநில அரசிடம் கோரிக்கை வைப்பதாகவும் கூறினார்.
 
நிகழ்ச்சியில் தமிழகத்திலிருந்து பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள், அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்