முடிந்தது கோவிஷீல்டு பஞ்சாயத்து: மாறிய பிரிட்டன், இந்தியர்கள் மகிழ்ச்சி!

வெள்ளி, 8 அக்டோபர் 2021 (09:12 IST)
இரு தவணை கோவிஷீல்டு செலுத்திய இந்திய பயணிகள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. 
 
இந்தியாவில் கோரொனா பாதிப்பு குறைந்து வந்தாலும் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்கு செல்ல இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருப்பது அவசியம் என்பதால் பலரும் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
 
இதைடையே பிரிட்டன் அரசு முன்னதாக, இந்தியாவில் இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தாலும் அவர்கள் தடுப்பூசி போடப்படாதவர்களாகவே கருதப்படுவர் என கூறியது. அக்டோபர் 2 முதல் இந்த கட்டுப்பாடு அமலுக்கு வந்தது. இதனால் இந்தியா - பிரிட்டன் இடையே பிரச்னை நீடித்து வந்தது. 
 
இந்நிலையில் கொரோனாவுக்கு இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு பிரிட்டன் அங்கீகாரம் அளித்தது. இதனைத்தொடர்ந்து வரும் 11 ஆம் தேதி முதல் இரு தவணை கோவிஷீல்டு செலுத்திய இந்திய பயணிகள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்