இந்நிலையில் ஒரு ஆண்டு இரண்டு மாதங்கள் கழித்து நேற்று இங்கிலாந்தில் கொரோனா மரணமே இல்லை என்று பதிவாகியுள்ளது. இதனால் இங்கிலாந்து மக்களும் அரசும் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர். ஆனால் இப்போது இங்கிலாந்தில் கொரோனா மூன்றாவது அலைக்கான அறிகுறிகள் தென்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.