நியூயார்க் டைம்ஸ் ஒரு ஜோக்கர் பத்திரிகை: டிரம்ப் கிண்டல்

Webdunia
வியாழன், 29 ஜூன் 2017 (04:40 IST)
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே அந்நாட்டின் முன்னணி பத்திரிகைகள் அவரை கடுமையாக விமர்சனம் செய்தே எழுதி வருகின்றன. குறிப்பாக நியூயார்க் டைம்ஸ் அவருடைய ஒவ்வொரு கொள்கை முடிவையும் விமர்சனம் செய்வதோடு, அவரை கிண்டலடிக்கும் வகையில் விதவிதமான கார்ட்டூன்களையும் பதிவு செய்து வருகின்றது



 
 
இந்த நிலையில் 'தி நியூயார்க் டைம்ஸ் தவறான செய்தி பரப்பும் ஒரு ஜோக்கர் பத்திரிகை' என்று டிரம்ப் சாடியுள்ளார். முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, சுகாதாரம் குறித்து கொண்டு வந்த 'ஒபாமா கேர் மசோதா'-வை ட்ரம்ப் கவனிப்பதே இல்லை. மேலும் இந்த மசோதாவை முடக்கும் நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.
 
இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் கட்டுரை ஒன்றை நேற்றைய இதழில் வெளியிட்டுள்ளது. இந்த கட்டுரையால் கடுப்பான டிரம்ப் 'தோல்வியடைந்து வரும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் என்னைப் பற்றி தொடர்ந்து தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றது. அந்தச் செய்தி உண்மையா என்பதைக்கூட அவர்கள் பார்ப்பதில்லை. அது தவறான செய்திகளை வெளியிடும் ஜோக்' என்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்