மர்மம் நிறைந்த பெர்முடா முக்கோணத்தில் உருவாகியுள்ள புதிய தீவு!!

Webdunia
திங்கள், 3 ஜூலை 2017 (12:04 IST)
பெர்முடா முக்கோணத்தின் மத்தியில் ஆபத்தான தீவு ஒன்று உருவாகியுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


 
 
பெர்முடா முக்கோணத்திற்கு அருகே செல்லும் விமானங்கள் மற்றும் கப்பல்கள் மர்மமான முறையில் மாயமாகி வருவது விடைதெரியா மர்மமாகவே உள்ளது.
 
இந்நிலையில், 4,40,000 மைல்கள் பரப்பளவை கொண்ட பெர்முடா முக்கோணத்தின் மத்தியில் சிறிய தீவு ஒன்று உருவாகியுள்ளது அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


 

 
சிறிய மணல் திட்டு போன்று உருவாகிய நில பரப்பு நாட்கள் செல்ல செல்ல பெரிய தீவாக மாறியுள்ளது. இந்த தீவு Shelly என்று பெயரிடப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே ஆபத்து உருவாக்கும் பெர்முடா முக்கோணத்தின் மத்தியில் சிறிய தீவு உருவாகியிருப்பது மர்மமாக இருந்தாலும், இவை எச்சரிக்கும் வகையில் உள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
அடுத்த கட்டுரையில்