கொரோனா வைரஸ்க்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு !

Webdunia
திங்கள், 3 பிப்ரவரி 2020 (14:09 IST)
சீனா நாட்டில் இருந்து உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலால் பல்வேறு நாடுகள் பீதி அடைந்துள்ளனர். கடந்த டிசம்பவர் மாதம் இறுதியில் சீனாவில் பரவிய இந்த கொடிய வைரஸிற்கு இதுவரை 362 பேர் பலியாகியுள்ளனர்.  இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 17,300 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் சீன மக்களின் மருத்துவ சிகிச்சைக்காக சீன அரசு 9 நாட்களில் பிரமாண்ட மருத்துவமனை கட்டி எழுப்பியுள்ளது.
 
இந்நிலையில், சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வந்த பயணிகள் மற்றும் மாணவர்கள்  தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில் கொரோனா வைரஸுக்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என சீனா அரசு கூறிவந்த நிலையில், சினாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காய்ச்சல் மற்றும்  ஹெச்.ஐ.விக்கு அளிக்கப்படும் வைரஸ் எதிர்ப்பு மருந்துகளின் கலவைகளை கொண்டு சிகிச்கை அளிக்ப்பட்டு வருகிறது என்றும், அவரது உடல்நிலை   முன்னேற்றம் அடைந்துவருகிறது எனவும் தகவல் வெளியாகிறது. 
 
இந்த நிலையில், கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது இந்த மருத்துவத்தால் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்