இந்நிலையில் மாயன் காலண்டரின் டூம்ஸ்டே கணிப்பு எப்படி பொய்யானது என்ற ஆர்ய்ச்சியில் ஈடுபட்ட டூம்ஸ்டே ஆராய்ச்சியாளர்கள் தற்போது புதிய டூம்ஸ்டேயை அறிவித்துள்ளனர். அவர்களின் கணிப்பு படி ஜூன் 3 மற்றும் 4 தேதிகளில் உலகம் அழியும் என குறிப்பிட்டுள்ளனர். அதாவது இன்றும் நளையும் தான் உலகத்தின் கடைசி நாட்கள் என்கிறார்கள்.
இந்த காலண்டர் ஆய்வின்படி, குறிப்பிட்ட நான்கு கிரகங்கள் அணிவகுத்து ஒரு சதுரத்தை உருவாக்கும் என்றும், அந்த சதுர அம்சம் கிரகங்களுக்கிடையே ஒரு 90 டிகிரி பிரிவை உண்டாக்கி உராய்வு ஏற்பட காரணமாக திகழும் என்று கணிக்கப்பட்டுள்ளது.