தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கி வந்தவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி மட்டும் தான் இவருக்கு கைகொடுத்தது. அதையடுத்து வெளிவந்த தேவ், என்.ஜி.கே என தொடர் தோல்வி அடைந்ததால். கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் டோலிவுட்டிற்கு பறந்துவிட்டார்.
ஆனால், மார்க்கெட் சரிந்து விடாமல் இருக்க அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அதனை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் பதிவிட்ட ஒரு கவர்ச்சி புகைப்படத்திற்கு நடிகை சமந்தா ‘Amazeballs’ என்று கமன்ட் அடித்திருந்தார்.