இதனால் ஆப்கானிஸ்தானின் கோரயான் மற்றும் சிந்தாஜன் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அங்குள்ள வீடுகள் இடிந்து விழுந்ததாலும், நிலச்சரிவுகளாலும் ஏராளமானோர் பலியாகியுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 4000 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது. தேசிய மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 35 குழுக்கள் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி உள்ளவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.