ஆப்கானிஸ்தான் போட்டியிலும் சுப்மன் கில் இல்லை! – என்னதான் ஆச்சு அவருக்கு?

திங்கள், 9 அக்டோபர் 2023 (15:46 IST)
பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான சுப்மன் கில் உலக கோப்பை போட்டில் அடுத்து ஆப்கானிஸ்தானுடன் நடைபெறும் போட்டியிலும் கலந்துகொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.



உலக கோப்பை போட்டிகள் இந்தியாவில் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகின்றன. முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான் ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் உலக கோப்பையிலும் கலக்குவார் என எதிர்பார்க்கபட்ட நிலையில் அவருக்கு திடீரென டெங்கு பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் நேற்று நடந்த ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான உலக கோப்பை போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. அடுத்த போட்டிகளுக்குள் அவர் குணமாகி வர வேண்டும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அடுத்து நடைபெற உள்ள உலக கோப்பை போட்டியிலும் அவர் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.’

இந்தியாவின் அடுத்த போட்டி நாளை மறுநாள் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டெல்லியில் நடைபெற உள்ளது. ஆனால் சுப்மன் கில் இன்னும் உடல்நலம் தேறாததால் இந்த போட்டியில் அவர் விளையாட மாட்டார் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். சுப்மன் கில்லுக்கு சென்னையில் சிகிச்சை அளிக்கப்பட்டு ஓய்வில் இருக்கிறார் என்பது குறிப்பிட தக்கது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்