DeepSeekக்கு டாட்டா.. Video Generation வசதியோடு அறிமுகமான Qwen AI! - அலிபாபா வைத்த ஆப்பு!

Prasanth Karthick

செவ்வாய், 11 பிப்ரவரி 2025 (13:04 IST)

உலகளவில் ஏஐ தொழில்நுட்ப போட்டிகள் நடந்து வரும் நிலையில் புதிதாக களமிறங்கியுள்ள அலிபாபா க்ரூப்ஸின் Qwen AI கவனம் பெற தொடங்கியுள்ளது.

 

உலக அளவில் AI வருகையால் நடைபெற்று வரும் Automation செயல்பாடுகள் ஒரு பக்கம் இருக்க, AI தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதிலும், பயனர்களை ஈர்ப்பதிலும் AI நிறுவனங்கள் இடையே பெரும் போட்டியே எழத் தொடங்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே AI தொழில்நுட்பத்தில் Open AI-யின் ChatGPT தான் பாட்ஷா போல சுற்றி வந்தது. இதன் Free version தவிர பணம் செலுத்தி பல ப்ரத்யேக சேவைகளையும் பெற முடியும் என இருந்தது. இதற்கு எதிராக Google நிறுவனம் கொண்டு வந்த Gemini AI கூட சாட்ஜிபிடியை வீழ்த்த முடியவில்லை.

 

இந்நிலையில்தான் சமீபத்தில் சீனாவில் வெளியான DeepSeek AI சாட்ஜிபிடியின் பிரபல்யத்தை பின்னுக்கு தள்ளி முன்னேறியுள்ளது. சாட்ஜிபிடி வழியாக அதிக பணம் செலுத்தி பெறும் சேவைகளை, DeepSeek மிகவும் குறைந்த கட்டணத்தில் வழங்குவதால் அதற்கு வரவேற்பு அதிகரித்தது.

 

இந்நிலையில் DeepSeekஐ காலி பண்ண சீனாவிலிருந்தே முளைத்துள்ளது மற்றொரு புதிய AI. சீனாவின் பிரபலமான அலிபாபா நிறுவனம் உருவாக்கியுள்ள Qwen AI தற்போது தொழில்நுட்ப மார்க்கெட்டில் பேச்சுப்பொருளாகியுள்ளது. பல AI தளங்களில் பணம் செலுத்தி பெறக்கூடிய Image Generation, Video Generation உட்பட பல சேவைகளையும் Qwen AI கட்டணமில்லாமல் வழங்கியுள்ளது. தற்போது இதில் Image Generation வசதி பயன்படுத்தும் வகையில் உள்ளது. வீடியோ உருவாக்கும் வசதியில் விரைவில் அறிமுகமாகிவிடும் என கூறப்பட்டுள்ளது. இதனால் DeepSeek AIக்கு போட்டியாக Qwen மாறியுள்ளது. தொடர்ந்து பல AI கள் அறிமுகமாகிக் கொண்டே போவதால் தொழில்நுட்ப வல்லுநர்களும் எதை பின்பற்றுவது என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்