ஆண்ட்ராய்டு நிறுவனம் கடந்த 2005ஆம் ஆண்டு விலைக்கு வந்தபோது கூகுள் நிறுவனம் அந்நிறுவனத்தை 347 கோடிக்கு விலைக்கு வாங்கியது. ஆண்ட்ராய்டு முதலில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸைத்தான் அணுகியது. ஆனால் அப்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தால் ஆண்ட்ராய்டு நிறுவனத்தை வாங்கும் முயற்சியை கைவிட்டது. இதனையடுத்தே கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு நிறுவனத்தை பெற்றது. கடந்த 15 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி பெற்ற ஆண்ட்ராய்டு நிறுவனத்தின் இன்றைய மதிப்பு சுமார் 27 லட்சத்து 76 ஆயிரத்து 500 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது
இதுகுறித்து சமீபத்தில் பேட்டி அளித்த மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பில் தனது நேரத்தை செலவிட்டதும், ஆன்ட்ராய்டை கவனிக்காமல் விட்டதும் தனது நிர்வாகத்தில் நடந்த மிகப்பெரிய தவறு என்று தெரிவித்தார். மேலும் ஆன்ட்ராய்டிடம் தோற்றதே தான் செய்த மிகப்பெரிய தவறு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.